News June 22, 2024
தண்ணீர் கேட்டு உண்ணாவிரதப் போராட்டம்

தலைநகர் டெல்லியில், குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் பூதாகரமாகி வருகிறது. காலிக் குடங்களுடன் அரசியல் கட்சிகள் போராடுவதால் அங்குள்ள சூழல் போர்க்களமாகியுள்ளது. இந்த நிலையில், ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு உரிய நீரை வழங்க வலியுறுத்தி, ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். அவருடன் அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்களும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News September 16, 2025
மூலிகை: ஏழைகளின் நோய் விரட்டி எருக்கு!

விஷம் என ஒதுக்கும் எருக்கம் செடியில் பல மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடப்பதாக சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படுகிறது *செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதில், எருக்க இலையை அடுக்கிக் காலால் மிதித்தால், குதிகால் வலி நீங்கும் *செடியின் இலைகளை நெருப்பில் போட்டு எரித்து, அந்த புகையை சுவாசித்தால் மார்புச்சளி கட்டுப்படும் *இலையை நெருப்பில் வாட்டி, கட்டிகள் மேல் கட்டினால், அவை உடையும். SHARE IT.
News September 16, 2025
பாக்.,வுடன் கைகுலுக்கவேண்டிய கட்டாயம் இல்லை: BCCI

ஆசிய கோப்பை போட்டியில் PAK அணியினருக்கு இந்திய வீரர்கள் கைக்கொடுக்காமல் போனதற்கு, போட்டி முடிந்தவுடன் கைகுலுக்க வேண்டும் என்பது எந்த விதியிலும் இல்லை என BCCI விளக்கமளித்துள்ளது. முன்னதாக, இந்தியாவின் இந்த செயலால் கடும் அதிருப்திக்கு உள்ளான பாக்., ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் புகாரளித்திருந்தது. இதனால், போட்டி முடிந்தவுடன் கைக்கொடுப்பது கட்டாயம் இல்லை என BCCI-யின் அதிகாரி கூறியுள்ளார்.
News September 16, 2025
X கணக்கில் CM ஸ்டாலின் செய்த மாற்றம்

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்ற பிரச்சாரத்தை CM ஸ்டாலின் தீவிரமாக முன்னெடுத்துள்ளார். அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுகவினர் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழி எடுத்திருந்தனர். இந்த நிலையில், CM ஸ்டாலின் X கணக்கில் தனது பெயருடன் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என இணைத்துள்ளார். அதேபோல, புரொபைல் போட்டோவிலும் ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்பதை சேர்த்துள்ளார்.