News June 22, 2024
கள்ளக்குறிச்சி: பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புகளால் திக்குமுக்காடியுள்ளது கருணாபுரம் பகுதி. 50க்கும் மேற்பட்டோரை காவு வாங்கிய கள்ளச்சாராய விவகாரம் விஸ்வரூபமெடுத்து வருகிறது.
Similar News
News August 28, 2025
கள்ளக்குறிச்சி அருகே ஆன்லைன் மோசடி: ரூ.41 லட்சம் இழப்பு

சின்னசேலம் பகுதியை சேர்ந்த பொன்முடி மரவள்ளி கிழங்கு இடைத்தகராக இருக்கிறார். பொன்முடி சமூகவலைதளத்தில் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என்ற விளம்பரத்தை பார்த்து பல்வேறு தவணைகளாக ரூ.41 லட்சத்து 75 ஆயிரத்து 509 பணத்தை ஆன்லைன் மூலமாக மர்ம நபர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். கமிஷன் தொகை கிடைக்காததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட நபர் குறித்து ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளார்.
News August 27, 2025
கள்ளக்குறிச்சி: உங்க நிலத்தை கண்டுபுடிக்க இதோ வழி

கள்ளக்குறிச்சி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள்(அ)உங்க தாத்தா, அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு, ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <
News August 27, 2025
கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம்

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்று ஆகஸ்ட் 27 காய்கறிகளின் விலை நிலவரம் ஒரு கிலோ கணக்கில் கத்தரிக்காய் ரூபாய் 40 50 அவரைக்காய் ரூபாய் 60 80 வெண்டை ரூபாய் 35 கொத்தவரங்காய் ரூபாய் 40 புடலங்காய் ரூபாய் 30 பீர்க்கங்காய் ரூபாய் 30 முருங்கை ரூபாய் 30 முள்ளங்கி ரூபாய் 35 பிரண்டை ரூபாய் 60 பூசணி ரூபாய் 25 சுரைக்காய் ரூபாய் 20 என விற்பனை ஆகிறது என்று உழவர் சந்தை நிர்வாக அலுவலர் அறிவித்துள்ளார்.