News June 22, 2024
போட்டித் தேர்வில் முறைகேடு: ₹1 கோடி வரை அபராதம்

தேர்வு வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளை தடுப்பதற்கான புதிய சட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. நடப்பாண்டில் NEET, UGC போன்ற முன்னணித் தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுபோன்ற முறைகேடுகளை தவிர்க்க, பொதுத்தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) சட்டம், 2024 அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மோசடியாளர்களுக்கு 5-10 ஆண்டுகள் சிறை, ₹1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.
Similar News
News September 13, 2025
சளி தொல்லைக்கு இந்த டீ ஒன்றே போதும்!

மழைக்காலத்தில் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு இரவு முழுவதும் தூக்கமின்றி தவிப்பவரா நீங்கள் ? உங்களுக்காக அருமருந்து இதோ! வீட்டில் இருக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி, துளசி, சித்தரத்தை, ஆடாதோடை இலை இவற்றை சம அளவு எடுத்து வறுத்து, இடித்து பொடியாக்கி அதை கொதிக்கும் நீரில் போட்டு இறக்கிவிட்டு தேன் கலந்து குடியுங்கள் போதும். சளி தன்னால் நீங்கிவிடும். அத்துடன் உடலுக்கு புத்துணர்வும் வரும். ஷேர் பண்ணுங்க!
News September 13, 2025
தாயாகும் தருணத்திற்காக காத்திருக்கும் நடிகை சமந்தா!

தான் தாயாக வேண்டும் என்ற கனவு அப்படியேதான் உள்ளதாக சமந்தா உணர்வுப்பூர்வமாக கூறியுள்ளார். வயதாகி கொண்டே போகிறது, சீக்கிரம் திருமணம் செய்யுங்கள் என்ற ரசிகர்களின் கோரிக்கைக்கு அவர் பதிலளித்துள்ளார். ஒரு பெண் நினைத்தால், அவள் தாயாக முடியாத நேரம் என எதுவும் இல்லை என்ற அவர், தாய்மை என்ற வரம் தனக்கும் கிடைக்கும் என்று நம்புவதாகவும் பேசியுள்ளார். அந்த அழகான தருணத்திற்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
News September 13, 2025
2026-ல் நேபாளத்தில் தேர்தல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நேபாளத்தின் இடைக்கால PM ஆக சுசிலா கார்கி நேற்று பொறுப்பேற்றார். இந்நிலையில் நாடாளுமன்றத்துக்கான அடுத்த தேர்தல் 2026, மார்ச் 5-ல் நடத்தப்படும் என அதிபர் ஸ்ரீ ராம் சந்திர பெளடல் அறிவித்துள்ளார். முன்னதாக Gen Z தலைமுறையின் போராட்டத்தால் ஷர்மா ஒலி PM பதவியை ராஜினாமா செய்த நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. பிறகு ராணுவம் – Gen Z போராட்டக்காரர்கள் உடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.