News June 22, 2024
APPLY NOW: +2 படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை

இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள 320 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Navik & Yantrik பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18 – 22. கல்வித் தகுதி: +2, Diploma தேர்வு முறை: கணினி வழியிலான தேர்வு, உடல் தகுதித்தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 3. மேலும் தகவல்களுக்கு <
Similar News
News September 13, 2025
தேர்தல் செலவு: திமுக ₹170 கோடி, அதிமுக ₹5.7 கோடி

நாடாளுமன்ற தேர்தலில் பிராந்திய கட்சிகள் செலவழித்த தொகை விவரத்தை ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ளது. * 2024 தேர்தலில் திமுக ₹170 கோடி செலவு செய்துள்ளது. * எதிர்க்கட்சியான அதிமுக ₹5.7 கோடி செலவு செய்துள்ளது. * தெலுங்கானா பிஆர்எஸ் கட்சி ₹197 கோடி செலவு செய்து முதலிடத்தில் உள்ளது. * 2023-24 நிதியாண்டில் திமுகவின் மொத்த வருமானம் ₹180 கோடி ஆகும். * அதிமுகவின் வருமானம் ₹46 கோடி ஆகும்.
News September 13, 2025
அடுத்தக்கட்ட நடவடிக்கை? செங்கோட்டையன் பதில்

தனது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். அதிமுகவின் முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் டெல்லி சென்று திரும்பிய நிலையில், அவரது அடுத்தக்கட்ட நகர்வை எல்லோரும் உற்று நோக்குகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லோரும் நினைப்பது போல நல்லதையே நினைத்து நல்லதே செய்வோம் என்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
News September 13, 2025
பொன்னில் வடித்த சிலையே ஜான்வி

பாலிவுட், டோலிவுட்டில் கலக்கி வரும் ஜான்வி கபூர், கோலிவுட்டில் எப்போது நடிப்பார் என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர். அவரின் தாயைப் போலவே வசீகரிக்கும் அழகுடைய ஜான்வி கபூர், இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கிறங்கி போயுள்ளனர். அவருடைய அடுத்த படங்களின் விவரத்தை பார்க்கையில் இன்னும் சில ஆண்டுகளுக்கு தமிழ் ரசிகர்கள் காத்திருக்க வேண்டும் என தெரிகிறது.