News June 22, 2024
வெள்ளிப்பதக்கம் வென்ற ஷைலி சிங்

ஸ்லோவாக்கியாவில் நடந்த சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டியில், இந்திய வீராங்கனை ஷைலி சிங் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். கோசிஸ் நகரில் மகளிருக்கான மும்முறை நீளம் தாண்டுதல் இறுதிப்போட்டியில், 6.43 மீ., தூரம் தாண்டி, 2ஆவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். பல்கேரியாவின் மிட்கோவா (6.7 மீ.,), பிரிட்டனின் ஹாப்கின்ஸ் (6.4 மீ.,) ஆகியோர் முறையே தங்கம் & வெண்கலம் பதக்கங்களைக் கைப்பற்றினார்.
Similar News
News September 16, 2025
இதற்குதான் பாஜகவுடன் கூட்டணி..!

ஜெயலலிதா இறந்த பிறகு சிலர் அதிமுக ஆட்சியை கபளீகரம் செய்ய முயன்றதாகவும், அதனை காப்பாற்றியது மத்தியில் ஆட்சியில் இருந்த அரசுதான் (பாஜக) என்றும் EPS தெரிவித்துள்ளார். நன்றி மறப்பது நன்றன்று என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிய அவர், நன்றிக் கடனுக்காகவே பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதாக விளக்கம் அளித்துள்ளார். பாஜக எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை எனவும் EPS குறிப்பிட்டுள்ளார்.
News September 16, 2025
பதட்டம் நிறைந்த IND vs PAK போட்டிகள்

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா – பாக்., மோதும் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற போட்டியில் இந்தியா வென்றாலும், இதனை புறக்கணித்திருக்கலாம் என்பதே பலரது கருத்தாக இருக்கிறது. இந்நிலையில், இதற்கு முன்பு போர், தாக்குதல் ஆகியவற்றுக்கு இடையில் நடந்த இந்தியா – பாக்., போட்டிகள் குறித்து மேலே Swipe செய்து பாருங்கள். உங்க கருத்தை கமெண்ட்டில் சொல்லுங்க.
News September 16, 2025
குறுக்கே சுவர் எழுப்பிய மத்திய அரசு: வைகோ

CM ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றிவிட்டதாக வைகோ கூறியுள்ளார். திருச்சி மதிமுக மாநாட்டில் பேசிய அவர், திமுக சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்கு குறுக்கே சுவர் எழுப்பிய மத்திய அரசு தான் காரணம் என்று விமர்சித்துள்ளார். மேலும், 2026 தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெறும் என்பதை இம்மாநாட்டில் பிரகடனம் செய்வதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து என்ன?