News June 21, 2024

கரூர்: முகாமை தொடங்கி வைத்த ஆட்சியர்

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திருநங்கைகள், திரு நம்பிகளுக்கு அடையாள அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆயுஷ்மான் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் துவக்கி வைத்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பாக நடைபெற்றது. இதில், 36 திருநங்கைகள் வீட்டுமனை பட்டா மற்றும் சுய தொழிலுக்கான கடன் உதவி, வீடுகளே பராமரிக்க உதவி ஆகியவை வழங்கினார்.

Similar News

News August 13, 2025

கரூரில் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

image

கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினமான நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை 15ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பொது மக்களிடையே கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதித்தல், மற்றும் ஜல் ஜீவன் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. எனவே சம்மந்தபட்ட ஊராட்சி பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளர்.

News August 13, 2025

கரூர்: அரசு மதுபான கடைகள் மூடல் ஆட்சியர் உத்தரவு!

image

சுதந்திர தினத்தை’’ முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மூட வேண்டும். மேலும் மேற்படி தினத்தன்று விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் FL2 & FL3 பார் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என
மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News August 13, 2025

கரூர்: டிப்ளமோ முடித்தால் ரூ.24,500 சம்பளம்! APPLY NOW

image

கரூர் மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலை(BRBNMPL) நிறுவனத்தில் 88 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுபடி, Deputy Manager, Process assistant ஆகிய பணிகளுக்கு வரும் ஆக.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு டிப்ளமோ முடித்திருந்தாலே போதுமானது. ரூ.24,500 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. SHARE IT

error: Content is protected !!