News June 21, 2024

திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

image

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் கலெக்டர் க.கற்பகம் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் திருநங்கைகளுக்கு ஆதார் அட்டை, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை ஆகியவை எளிதில் விண்ணப்பித்திட நடைபெற்றது. மேலும் கல்விச்சான்று, சாதிச்சான்று, தொழில் தொடங்க ஏற்பாடு, இலவச வீட்டு மனை பட்டா, அடிப்படை வசதிகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Similar News

News August 30, 2025

பெரம்பலூர்: தொழில் தொடங்க ரூ.15 லட்சம் கடன்

image

பெரம்பலூர், இளைஞர்கள் சொந்தமாக தொழில் துவங்குவதை ஊக்குவிக்கும் வகையில், அரசு UYEGP என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 25 % மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>www.msmeonline.tn.gov.in என்ற<<>> இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News August 30, 2025

பெரம்பலூர்: உங்கள் நிலத்தை கண்டுபிடிக்க எளிய வழி

image

பெரம்பலூர் மக்களே, நீங்கள் வாங்கிய நிலம் அல்லது உங்கள் குடும்பத்தின் பூர்வீக நிலங்களின் பத்திரங்கள் கையில் இருந்தும், நிலம் சரியாக எங்கு உள்ளது என்று உங்களுக்கு தெரியவில்லையா? இனி கவலை வேண்டாம். உங்கள் நிலங்களை கண்டுபிடிக்க <>இங்கே கிளிக் செய்து<<>>, பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை ஒரு பைசா செலவில்லாமல் எளிமையாக கண்டுபிடிக்க முடியும். இதனை ஷேர் பண்ணுங்க!

News August 30, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மீண்டும் மாற்றம்!

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் பெற்று புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற சா.அருண்ராஜ் தற்சமயம் மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தற்போது இவருக்குப் பதிலாக காஞ்சிபுரம் சார் ஆட்சியராக இருந்த ந.மிருணாளினி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!