News June 21, 2024
டாஸ்மாக் மூலம் ₹45,855.67 கோடி வருமானம்: அரசு

தமிழ்நாட்டில் 2023 – 24 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ₹45,855.67 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக, தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருவாய் கடந்த ஆண்டை விட, ₹1,734.54 கோடி கூடுதலாகும். 2022 – 23 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ₹44,121.13 கோடி வருவாய் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு டாஸ்மாக் வருவாய் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 13, 2025
கூலியில் நடித்தது தவறு: அமீர் கான் சொன்னது உண்மையா?

‘கூலி’ படத்தில் நடித்தது தவறு என அமீர் கான் கூறியது போன்ற ஒரு பேப்பர் செய்தி இணையத்தில் வைரலானது. லோகேஷ் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ள அமீர் கான், எப்படி இவ்வாறு பேசினார் என சிலர் குழப்பமடைந்தனர். ஆனால், உண்மையில் அவர் இப்படியான ஒரு கருத்தை தெரிவித்ததாக எந்த இடத்திலும் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படவில்லை. அதன்படி, பார்க்கையில் இது எடிட் செய்யப்பட்ட போலி செய்தியாகவே தெரிகிறது.
News September 13, 2025
அமைதி பேச்சுவார்த்தை நிறுத்தம்: ரஷ்யா திட்டவட்டம்

உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையே அமைதியை நிலைநாட்ட, டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய முயற்சித்த நிலையில், இப்போதைக்கு அந்த வாய்ப்பே கிடையாது என ரஷ்யா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனிடையே உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போர் இப்போதைக்கு நிற்க வாய்ப்பில்லை.
News September 13, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க