News June 21, 2024
நள்ளிரவில் திருடர்கள் கைவரிசை

திருத்தணி, கே.ஜி.கண்டிகை பகுதியைச் சேர்ந்த பூ வியாபாரி கோவிந்தன் (58). இவர் நேற்று இரவு வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு மர்ம நபர்கள் வீட்டின் பின்புறம் வழியாக புகுந்து, வீட்டு பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ. 27 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 31, 2025
திருவள்ளுர்:அதிகாரிகளால் ரூ.12 கோடி வீண்; கலெக்டர் உத்தரவு

திருவள்ளுர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகளுக்கு, 2023 – 24ம் ஆண்டு 86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் பல பணிகள் கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில், 12.97 கோடி ரூபாய் பணிகளை கலெக்டர் பிரதாப் ரத்து செய்து, நிதியை திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளார். அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் ரூ.3,32,46,204 திருப்பி அனுப்ப பட உள்ளது.
News August 30, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News August 30, 2025
மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் நெடுஞ்சாலை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெற்றது. மேலும் நெடுஞ்சாலைத்துறையின் அனைத்து அலகு அலுவலர்கள் (ம) தேசிய நெடுஞ்சாலைக்கு உட்பட்ட (NHAI) அனைத்து அலகு அலுவலர்களுடன் இக்கூட்டம் நடைபெற்றது.