News June 21, 2024
ஜூனியர் தடகள சாம்பியன் ஷிப் போட்டி

தமிழ்நாடு தடகள சங்கத்துடன் இணைந்து திருவள்ளூர் மாவட்ட தடகள சங்கம் மாநில அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன் ஷிப் போட்டி வரும் 29 ஆம் தேதி சென்னை, ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. அதன்படி ஓட்டம், குதித்தல், குண்டு எறிதல் போட்டிகள் நடத்தப்படும். போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 30, 2025
திருவள்ளூரில் மரங்களின் மாநாடு

நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அருங்குளத்தில் மரங்களின் மாநாடு நடைபெற உள்ளது. சமீபத்திய நாட்களாகவே ஆடு மாடுகள் மாநாடு, மேய்ச்சல் நில போராட்டம், கள் எடுக்கும் போராட்டம் என்ற பாதையில் பயணிக்கும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று நடக்கவுள்ள மரங்களின் மாநாட்டில் பேச உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் செய்து வருகின்றனர்.
News August 30, 2025
வேன் கவிழ்ந்து விபத்து 12 பேர் காயம்

திருத்தணி அருகே தண்டலம் பகுதியில், தனியார் பீர் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து 8 பெண்கள் உட்பட 12 பேர் காயமடைந்தனர். அடிக்கல்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே, எதிரே வந்த டிராக்டருக்கு வழிவிடும் போது, வேன் திடீரென தலைகீழாக கவிழ்ந்தது. காயமடைந்தோர் கனகம்மாசத்திரம் சுகாதார நிலையம் மற்றும் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
News August 30, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

திருவள்ளூர் இன்று (ஆக.30) சோழவரம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம், கடம்பத்தூர், ஆரணி ஆகிய பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை <