News June 21, 2024

செங்கல்பட்டு: விவசாயிகள் கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் துறை சார்பில் விவசாயிகள் பங்கேற்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இதில்,  ஆட்சியர் அருண்ராஜ்,  மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இந்த கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து வந்த விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.

Similar News

News August 30, 2025

நெல் கொள்முதல் நிலையங்கள்: விவசாயிகள் கோரிக்கை.

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நெல் அறுவடை தொடங்கியுள்ள நிலையில், கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழை பெய்தால் நெல் வீணாகிவிடும் என அவர்கள் அச்சப்படுகின்றனர். இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் டி. ஸ்நேகா, 9 மையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும், தேவைக்கேற்ப விரைவில் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

News August 30, 2025

செங்கல்பட்டு பெண்கள் வங்கி கணக்கில் ரூ.5,000

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிர் மாவு அரைக்கும் இயந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியத் தொகையாக தமிழக அரசு வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மகளிர் சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில் செப்.1 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். ஆண்டு வருமான வரம்பு ரூ.1,20,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

News August 30, 2025

செங்கல்பட்டு: B.E.,B.Sc.,B.C.A படித்தவர்கள் கவனத்திற்கு

image

ஐ.டி-யில் வேலை தேடும் இளைஞர்கள் அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவசமாக பயிற்சி பெற்று வேலை வாய்ப்பை பெறலாம். இந்த பயிற்சி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணம் இல்லை, உணவு, தங்கும் இடம் இலவசம். மேலும் மாதம் ரூ.12,000 உதவித்தொகை உண்டு. <>இந்த லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17562134>>விபரங்களுக்கு இங்கு<<>> கிளிக் பண்ணுங்க

error: Content is protected !!