News June 21, 2024

சமையல் எரிவாயு குறைதீர்க்கும் கூட்டம்

image

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு முகவர்களின் குறைதீர்க்கும் கூட்டம் ஜூன் 27-ம் தேதி மாலை 5 மணிக்கு வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பான கோரிக்கைகளை நேரில் தெரிவிக்கலாம்.

Similar News

News August 30, 2025

ராம்நாடு: லட்சத்தில் சம்பளம் மத்திய அரசு வேலை! APPLY NOW

image

மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள 1,543 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech முடித்திருக்க வேண்டும். கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் பதவிக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1.20 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். செப்.17ஆம் தேதி கடைசி தேதியாகும். வேலை தேடும் நபர்களுக்கு இந்த செய்தியை SHARE பண்ணுங்க

News August 30, 2025

ராம்நாடு: ரூ.6 லட்சம் மானியம்.! உடனே APPLY

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் உழவர் நல சேவை மையம் அமைக்க மானியம் வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் 30% மானியமாக ரூ.3 லட்சம் – ரூ.6 லட்சம் வரை வழங்கப்படும். மீதம் தொகைக்கு கடனுதவியும் ஏற்பாடு செய்யப்படும். 20 முதல் 45 வயதுடைய வேளாண் துறை சார்ந்து படித்தவர்கள் <>அக்ரிஸ்நெட் <<>>இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

News August 30, 2025

இராமேஸ்வரம் மீனவர்களுக்கு 6-வது முறையாக காவல் நீட்டிப்பு

image

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை 22 மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களும் ஜூலை 28 மீன்பிடிக்க சென்ற 5 மீனவர்கள் என மொத்தம் 9 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தாக இலங்கை கடற்படை கைது செய்தது. இந்நிலையில் நேற்று (ஆக. 29) நீதிமன்ற காவல் முடிந்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் 4 பேருக்கு செப். 4 வரையும் 5 மீனவர்களுக்கு செப் 12 வரையும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது

error: Content is protected !!