News June 21, 2024
AUS-BAN ஆட்டம் மழையால் பாதிப்பு

T20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று ஆஸ்திரேலியா-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. முதலில் விளையாடிய BAN அணி 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 141 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய AUS அணி, 6.2 ஓவர்களில் 64 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால், போட்டி சற்று நேரத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளது. நடப்பு T20 WC தொடரின் பல ஆட்டங்கள் மழையால் பாதித்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 15, 2025
ஆஸ்கர் போட்டியில் பா.ரஞ்சித்தின் ஆவணப்படம்

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ், யாழி பிலிம்ப்ஸ் தயாரிப்பில் மறைந்த முற்போக்கு பாடகரும், எழுத்தாளருமான தலித் சுப்பையாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு, ‘தலித் சுப்பையா-வாய்ஸ் ஆஃப் தி ரிபல்ஸ்’ என்ற ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. இயக்குநர் கிரிதரன் இதை இயக்கியிருந்தார். இந்நிலையில், இந்த ஆவணப்படம் ஆஸ்கருக்கான போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளதாக நீலம் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
News November 15, 2025
BREAKING: முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத உயர்வு

நாமக்கல்லில் வரலாறு காணாத புதிய உச்சமாக முட்டையின் கொள்முதல் விலை ₹5.95 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 55 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் இதுதான் அதிகபட்ச விலையாகும். முட்டையின் நுகர்வு, விற்பனை அதிகரிப்பு காரணமாக விலை உயர்வதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், சில்லறை கடைகளில் 1 முட்டையின் விலை ₹7 வரை விற்கப்பட வாய்ப்புள்ளது.
News November 15, 2025
Show-off ஆட்சியில் TN-க்கு எப்படி தொழில்கள் வரும்? EPS

TN-க்கு தொழில் தொடங்க வரவேண்டிய கொரியாவின் ஹ்வாசங் நிறுவனம், ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கூறி கண்டனம் தெரிவித்துள்ள EPS, 4 ஆண்டுகளாக பொம்மை முதல்வர் ஷோ காட்டியதால் என்ன பயன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு, படுகுழியில் பெண்கள் பாதுகாப்பு, விண்ணை முட்டும் ஊழல்கள் என சீர்குலைந்துள்ள இந்த ஆட்சியில் எப்படி தொழில் நிறுவனங்கள் TN-க்கு வரும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.


