News June 21, 2024
NEET, JEE பயிற்சிக்கான வழிகாட்டு முறைகள் வெளியீடு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு NEET, JEE தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்குவது குறித்த வழிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் +1, +2 வகுப்பு மாணவர்களுக்கு NEET, JEE தேர்வை எதிர்கொள்ள இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில், தலைமை ஆசிரியர்கள் அதனை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி விளக்கமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
Similar News
News November 15, 2025
இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

*நவ.16: கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, காரைக்காலில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. *நவ.17: தூத்துக்குடி, நெல்லை, குமரி, விழுப்புரம், காஞ்சி, செங்கல்பட்டுக்கு ஆரஞ்சு அலர்ட். கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், சென்னை, நாகை, தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டைக்கு மஞ்சள் அலர்ட்.
News November 15, 2025
ADMK தற்போது EDMK ஆக உள்ளது: TTV

எம்ஜிஆர் தொடங்கிய கட்சியே தற்போது இல்லாமல் போய்விட்டதாக விமர்சித்துள்ள TTV தினகரன், ADMK தற்போது EDMK ஆக செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். நாங்கள் துரோகம் செய்ததாக EPS கூறி வருகிறார், ஆனால் அவர் தான் துரோகம் செய்தவர் என்பது எல்லாருக்கும் தெரியும் என்றும் TTV தெரிவித்துள்ளார். துரோகம் என்ற வார்த்தையை சொல்லக்கூட EPS-க்கு தகுதியில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
News November 15, 2025
நட்சத்திர தம்பதிக்கு குழந்தை பிறந்தது.. ❤️❤️

பாலிவுட் நடிகர் ராஜ் குமார் ராவ் – நடிகை பத்ரலேகா தம்பதிக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறந்திருப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர். தங்களது திருமண நாளில் குழந்தை பிறந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் அவர்கள் தெரிவித்துள்ளனர். 2021 நவ.15-ல் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த நட்சத்திர ஜோடிக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


