News June 21, 2024
ஆதி சித்தர்களின் ஓகக்கலையை பயில்வோம்!

‘யோகா’ என்ற சமஸ்கிருத சொல் ‘ஓகம்’ என்ற தமிழ் சொல்லை அடிப்படையாக கொண்டது. ஓகம் என்றால், ஒன்று மற்றொன்றுடன் கலத்தல் என பொருள். ஐந்து புலன்கள், சூட்சும உடல், மனம் முதலியவை ஒன்றிணைந்து செய்யப்படுவதே ஓகம். உடலின் ஆற்றலை வெளிமுகமாக வீணடிக்காமல், உள்முகமாகத் திருப்பி ஒடுக்க சித்தர்கள் ஓக சூட்சுமத்தை மக்களுக்கு சொல்லிக்கொடுத்தனர். எனவே ஆரோக்கியமான, அமைதியான வாழ்வைப் பெற ஓகக்கலையை பயில்வோம்!
Similar News
News September 15, 2025
இந்தியாவின் lucky charm ஷிவம் துபே

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே அரிதான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது துபே விளையாடிய 31 டி20 போட்டிகளில் தொடர்சியாக இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது. 2020-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் தொடங்கிய இந்த வெற்றி, நேற்றைய பாகிஸ்தான் இடையேயான போட்டிவரை தொடர்ந்துள்ளது.
News September 15, 2025
விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், SIR ரத்து செய்யப்படும்: SC

பிஹாரில் ECI-யால் நடத்தப்பட்ட சிறப்புத் தீவிரத் திருத்தத்தை(SIR) எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது, SIR-ல் ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் முழு செயல்முறையும் ரத்து செய்யப்படும் என SC எச்சரித்துள்ளது. இந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு பிற மாநிலங்களுக்கும் பொருந்தும் என தெரிவித்து கோர்ட், விசாரணையை அக்., 7-க்கு ஒத்திவைத்தது.
News September 15, 2025
பாமகவின் தலைவர் அன்புமணி இல்லை: MLA அருள்

<<17715168>>தேர்தல் ஆணைய கடிதத்தில் <<>>எந்த இடத்திலும் மாநில தலைவர் அன்புமணி என குறிப்பிடப்படவில்லை என்று MLA அருள் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் கே.பாலு திட்டமிட்டு பொய்யை பரப்பி வருவதாகவும், அலுவலக முகவரியை சில மாதங்களுக்கு முன்பு திட்டமிட்டு மாற்றியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். கொடி, சின்னத்தை பயன்படுத்த கூடாது என யாராலும் ராமதாஸுக்கு தடை விதிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.