News June 21, 2024
காங்கிரஸ் இன்று நாடு தழுவிய போராட்டம்

நீட் தேர்வு முறைக்கேட்டைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மாநிலத் தலைநகரங்களில் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் குரல்கள் வலுத்துள்ள நிலையில், காங்கிரஸ் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. அத்துடன், நாடாளுமன்றத்திலும் இவ்விவகாரத்தை கையில் எடுக்க உள்ளது.
Similar News
News September 15, 2025
புதிய கட்சி தொடங்கினார் மல்லை சத்யா!

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, புதிய திருப்பமாக தனிக் கட்சி தொடங்கியுள்ளார். மஞ்சள் நட்சத்திரங்களுடன் கருப்பு, சிவப்பு நிற கொடியை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். கட்சியின் பெயரை நவ.20-ல் அறிவிப்பதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க குழு அமைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திருச்சியில் மதிமுக மாநாடு நடைபெறும் நிலையில், மல்லை சத்யா புதிய கட்சி தொடங்கியுள்ளார்.
News September 15, 2025
இந்தியாவின் lucky charm ஷிவம் துபே

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே அரிதான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது துபே விளையாடிய 31 டி20 போட்டிகளில் தொடர்சியாக இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது. 2020-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் தொடங்கிய இந்த வெற்றி, நேற்றைய பாகிஸ்தான் இடையேயான போட்டிவரை தொடர்ந்துள்ளது.
News September 15, 2025
விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், SIR ரத்து செய்யப்படும்: SC

பிஹாரில் ECI-யால் நடத்தப்பட்ட சிறப்புத் தீவிரத் திருத்தத்தை(SIR) எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது, SIR-ல் ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் முழு செயல்முறையும் ரத்து செய்யப்படும் என SC எச்சரித்துள்ளது. இந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு பிற மாநிலங்களுக்கும் பொருந்தும் என தெரிவித்து கோர்ட், விசாரணையை அக்., 7-க்கு ஒத்திவைத்தது.