News June 21, 2024

மோடிக்கு 100 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைக்கும்

image

பங்குச்சந்தையை வைத்து மோடி, அமித் ஷா தரப்பு செய்த மோசடிக்குக் குறைந்தது 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் என்று சசிகாந்த் செந்தில் எம்.பி., கூறியுள்ளார். பங்குச்சந்தை வர்த்தகத்தில் பாஜக செய்த பெரும் மோசடி குறித்து மக்களவையில் அழுத்தமான கேள்விகளை முன்வைக்க உள்ளதாகக் கூறிய அவர், வெறுப்பு & ஆதிக்கம் நிறைந்த அடக்குமுறை ஆட்சியை பாஜக இனி நடத்த முடியாது என்றார்.

Similar News

News November 15, 2025

BREAKING: CSK-வில் 10 வீரர்கள் விடுவிப்பு.. கையில் ₹43.9 கோடி

image

ஐபிஎல் 2026 சீசனையொட்டி, CSK அணி 10 வீரர்களை விடுவித்துள்ளது. ராகுல் திரிபாதி, வன்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த், தீபக் ஹூடா, விஜய் சங்கர், ஷேக் ரஷீத், கமலேஷ் நாகர்கோட்டி, மதீஷா பதிரானா, ரச்சின், டேவன் கான்வே ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே ராஜஸ்தானுக்கு ஜடேஜா, சாம் கரன் டிரேட் செய்யப்பட்டு இருந்தனர். இதையடுத்து, CSK அணியால் ஏலத்தில் ₹43.9 கோடி செலவு செய்ய முடியும்.

News November 15, 2025

FLASH: தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கமாக கண்ணாமூச்சி ஆடி வருகிறது. இந்த வார வர்த்தக முடிவில், 1 சவரன் ₹2,000 அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹90,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, ₹92,400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாளை விடுமுறை என்பதால் விலையில் எந்த மாற்றமும் இருக்காது. அடுத்த வாரத்திலும் விலை ஏற்ற இறக்கமாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 15, 2025

மும்பை அணியில் இருந்து சச்சின் விலகலா?

image

மும்பை அணியில் 5 ஆண்டுகளாக பயணித்த சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் டிரேட் மூலம் லக்னோ அணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மும்பை அணியின் ICON-ஆக இருக்கும் சச்சினும் அணியில் இருந்து விலகுவாரா என்ற கேள்வி இணையத்தில் வைரலானது. ஆனால், MI அப்டேட் செய்துள்ளது புதிய Support Staff லிஸ்டில் சச்சின் பெயரே முதலில் உள்ளது. சச்சினையும் மும்பை அணியையும் பிரிக்க முடியமா என்ன?

error: Content is protected !!