News June 21, 2024

கூலிக்கு பதிலாக சாராயம்?

image

ஊதியத்திற்கு பதிலாக கொடுக்கப்படும் சாராயத்தால் தங்களது குடும்பங்கள் சீரழிந்துவருவதாக காட்டு நாயக்கன் பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஏழ்மையும், அறியாமையும் வாழ்வாக கொண்ட ஏழை எளிய மக்களுக்கு களை வெட்டும் கூலிக்காக சாராயம் வழங்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்பகுதிகளில் Minimum Wages Act சட்டத்தை அமுல்படுத்துவதை அரசு உறுதிசெய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Similar News

News September 12, 2025

BREAKING: புதிதாக தொடங்குகிறார் அண்ணாமலை

image

இளைஞர்களின் தொழில் ஆர்வத்தை ஊக்குவித்து அவர்களுக்கு உதவும் வகையில் முதலீட்டு நிறுவனம் தொடங்கும் பணி ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். <<17687290>>விவசாய நிலம் வாங்கியது<<>> தொடர்பான சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ள அவர், மத்திய அரசின் PMEGP திட்டத்தில் பால் பண்ணை அமைக்க கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும் கூறியுள்ளார். சர்ச்சைகளுக்கு எல்லாம் அடுத்தாண்டு தனது IT பதில் சொல்லும் என்றார்.

News September 12, 2025

சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

image

திருமண மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தொடர்ந்த வழக்கில், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சீமான் மன்னிப்பு மனுவை சமர்ப்பிக்காவிட்டால், வழக்கை ரத்து செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடித்துக் கொண்டிருந்த போதே, திருமண ஆசை காட்டி ஏமாற்றியவர், பொதுவெளியில் அவதூறாக பேசி வருவதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் நடிகை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

News September 12, 2025

கதறும் Employees.. எங்களுக்கும் ரெஸ்ட் வேணும்!

image

வேலை செய்யும் 88% இந்தியர்களுக்கு லீவு கிடைக்காமல், நேர வரைமுறையின்றி வேலை செய்வதாகவும், பொது விடுமுறையிலும் வேலை செய்ய நிறுவனங்கள் வலியுறுத்துவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. வேலை நேரத்தில் டீ பிரேக் கூட கிடைப்பதில்லையாம். வீட்டுக்கு சென்ற பிறகு போன் வந்து அதனை எடுக்காமல் விட்டால், Promotion கிடைக்காமல் போய் விடுமோ என்ற பயத்தில் 79% பேர் வாழ்வதாகவும் கூறப்படுகிறது. இவர்களுக்கும் ரெஸ்ட் வேண்டாமா..?

error: Content is protected !!