News June 20, 2024

போதை பொருட்கள் தடுப்பு ஆலோசனை கூட்டம்

image

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தலைமையில் கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டத்தினை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம் நடந்தது.      இக்கூட்டத்தில் காவல்துறை, மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு, டாஸ்மாக், வருவாய்துறை, உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Similar News

News August 30, 2025

குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

image

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து திடீர் அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் நீராடுவதற்காக இன்று திரண்டு வந்த வண்ணம் இருந்த நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

News August 29, 2025

தென்காசி அடிக்கடி ரயில் பயணம் செய்றீங்களா??

image

தென்காசி ரயில் நிலையத்தில் ரயில்கள் எங்க போகுது? உங்க ரயில் எந்த பிளாட்பார்ம் ல நிக்கதுன்னு தெரியலையா?? உங்களுக்காகவே ஒரு SUPER தகவல்.. NTES மூலமாக தென்காசியில் இருந்து எத்தனை ரயில்கள் கிளம்புகிறது. எந்தெந்த பிளாட்பார்ம் ல ரயில் நிக்குதுன்னு இங்க <>க்ளிக்<<>> பண்ணி தெரிஞ்சுக்கோங்க.. இனி எந்த பிளாட்பார்ம்ன்னு ரயில் அறிவிப்புகளுக்கு காத்திருக்காதீங்க. ரயில் பயணம் பண்றவங்களுக்கு SHARE பண்ணுங்க..

News August 29, 2025

தென்காசி: இலவச தையல் மிஷின்.! உடனே APPLY பண்ணுங்க!

image

தென்காசி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் மிஷின்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தென்காசி மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும். SHARE பண்ணுங்க

error: Content is protected !!