News June 20, 2024

திருவாரூரில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

திருவாரூர் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தமிழ்செல்வி கூறுகையில், திருவாரூர் மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை 21ம் தேதி காலை 11மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் திருவாரூர் நகர், புறநகர், கச்சனம், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம், திருவாஞ்சியம்,  வலங்கைமான், பூந்தோட்டம், பேரளம், வேலங்குடி, அதம்பார் பகுதி குறைகளை கூறி பயனடையலாம் என்றார். 

Similar News

News August 30, 2025

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் (29.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யவும். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்!

News August 29, 2025

திருவாரூர்: திருமண தடையா? கவலை வேண்டாம்!

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரித்துவாரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாதாளேஸ்வரர் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான பாதாளேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

News August 29, 2025

திருவாரூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வேண்டுமா?

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <>https://tnuwwb.tn.gov.in/ <<>>என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில், Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!