News June 20, 2024
மக்களவையின் தற்காலிக சபாநாயகர் நியமனம்

ஒடிசாவைச் சேர்ந்த பாஜக எம்.பி பர்த்ருஹரி மஹ்தாபை மக்களவையின் தற்காலிக சபாநாயகராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் வரை சுரேஷ் கொடிக்குன்னில், ராஜுதேவர் பாலு, ராதா மோகன் சிங், ஃபக்கன் சிங் குலாஸ்தே மற்றும் சுதிப் பந்தோபாத்யாய் ஆகியோர் இடைக்கால சபாநாயகருக்கு உதவியாக இருப்பார்கள் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரஜிஜூ அறிவித்துள்ளார்.
Similar News
News September 15, 2025
உலகின் விசித்திரமான இயற்கை அதிசயங்கள்

இயற்கையை விட சிறந்த படைப்பாளி, சிறந்த ஓவியர், சிறந்த டிசைனர் இருக்கவே முடியாது. உலகம் முழுவதும் அமைந்துள்ள இயற்கை காட்சிகளும், நிலத்தோற்றங்களும் இதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அப்படி, காட்சியளிக்கும் இடங்கள் சிலவற்றை மேலே உள்ள போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். swipe செய்து பாருங்கள். இதுபோல வேறு இடங்கள் இருந்தால் கமெண்ட்டில் சொல்லுங்கள்.
News September 15, 2025
Asia Cup: இன்று 2 லீக் போட்டிகள்

ஆசிய கோப்பை தொடர், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று 2 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. குரூப் A-யில் உள்ள UAE – ஓமன் அணிகள் மோதும் போட்டி, மாலை 5:30 மணிக்கு அபுதாபியில் தொடங்குகிறது. குரூப் B-யில் உள்ள இலங்கை – ஹாங்காங் அணிகள் விளையாடும் போட்டி, இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெறவுள்ளது.
News September 15, 2025
பாமக தலைவர் அன்புமணி கிடையாது: ராமதாஸ் தரப்பு

பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்தும், மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளதாக <<17715384>>வழக்கறிஞர் பாலு<<>> சற்றுமுன் அறிவித்தார். இந்நிலையில் பாமகவுக்கு சின்னம் மாம்பழம்தான்; தலைவர் அன்புமணிதான் என்று தேர்தல் ஆணையம் எங்கும் குறிப்பிடவில்லை. தேர்தல் ஆணையம் கொடுத்த தகவலை வழக்கறிஞர் பாலு தவறாக பரப்புகிறார் என்று ராமதாஸ் அணி பொதுச்செயலாளர் முரளி சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.