News June 20, 2024

தேசிய தேர்வு முகமை மீது நடவடிக்கை

image

நீட் தேர்வின் வெளிப்படைத் தன்மையில் எந்தவித சமரசமும் கிடையாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் நலனே முக்கியம்; அதை காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் எனக் கூறிய அவர், தேசிய தேர்வு முகமையின் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்த உயர்மட்டக்குழு அமைக்கப்படும்; தேவைப்பட்டால் தேசிய தேர்வு முகமை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

Similar News

News September 15, 2025

தாய்மையை தலைநிமிர வைத்த ஜுவாலா குட்டா

image

தன் சுத்திகரிக்கப்பட்ட ரத்தத்தை மார்பமுதாய் வழங்கி, நோயெதிர்ப்பு கொண்ட குழந்தையாக மாற்றும் வல்லமை கொண்டவள் பெண். அந்த அமுதம், தன் குழந்தைக்காக மட்டுமல்லாது, அதற்காக காத்திருக்கும் பல குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார் ஜுவாலா குட்டா. கிட்டத்தட்ட 30 லிட்டர் தாய்ப்பாலை நன்கொடையாக வழங்கி உலகின் அனைத்து தாய்மார்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார். பேட்மிண்டன் வீராங்கனையான இவர், விஷ்ணு விஷாலின் மனைவி ஆவார்.

News September 15, 2025

உலகின் விசித்திரமான இயற்கை அதிசயங்கள்

image

இயற்கையை விட சிறந்த படைப்பாளி, சிறந்த ஓவியர், சிறந்த டிசைனர் இருக்கவே முடியாது. உலகம் முழுவதும் அமைந்துள்ள இயற்கை காட்சிகளும், நிலத்தோற்றங்களும் இதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அப்படி, காட்சியளிக்கும் இடங்கள் சிலவற்றை மேலே உள்ள போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். swipe செய்து பாருங்கள். இதுபோல வேறு இடங்கள் இருந்தால் கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News September 15, 2025

Asia Cup: இன்று 2 லீக் போட்டிகள்

image

ஆசிய கோப்பை தொடர், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று 2 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. குரூப் A-யில் உள்ள UAE – ஓமன் அணிகள் மோதும் போட்டி, மாலை 5:30 மணிக்கு அபுதாபியில் தொடங்குகிறது. குரூப் B-யில் உள்ள இலங்கை – ஹாங்காங் அணிகள் விளையாடும் போட்டி, இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெறவுள்ளது.

error: Content is protected !!