News June 20, 2024
விஜய்யை கட்டி கதறிய பெண்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, உடல்நலம் பாதிக்கப்பட்டவரின் மனைவி விஜய்யை கட்டி கதறிய காட்சி காண்போரை கலங்க செய்தது. அவருக்கு ஆறுதல் கூறிய விஜய், தேவையான உதவிகளை செய்வதாக கூறியுள்ளார்.
Similar News
News November 15, 2025
தேர்தலில் போட்டியிடுவதை நிதிஷ் ஏன் தவிர்க்கிறார்?

9-வது முறையாக பிஹார் CM-மாக உள்ள நிதிஷ்குமார், கடைசியாக 1985-ல் MLA-வாக தேர்வானார். 2000-ல் எந்த அவையிலும் உறுப்பினராக இல்லாத நிலையில், CM ஆன 8 நாளில் ராஜினாமா செய்தார். 2005-ல் பிஹார் <<18293809>>மேலவைக்கு<<>> தேர்வான அவர், இன்றுவரை MLC-யாகவே தொடர்கிறார். ஒரு தொகுதியில் மட்டும் தன்னை சுருக்கிக் கொள்ள விரும்பவில்லை என்றும், மேலவையை தான் மிகவும் மதிப்பதாகவும், இது தன் தனிப்பட்ட சாய்ஸ் என்றும் நிதிஷ் கூறுகிறார்.
News November 15, 2025
BREAKING: இந்தியாவுக்கு அதிர்ச்சி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக KL ராகுல் 39 ரன்களை எடுத்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் சைமன் ஹார்மர் 4 விக்கெட்களை வீழ்த்தினார். கடைசி 3 ரன்களை எடுப்பதற்குள் இந்தியா, வரிசையாக 3 விக்கெட்களை இழந்தது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்கா 30 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
News November 15, 2025
யுனிசெஃப் தூதரானார் கீர்த்தி சுரேஷ்

யுனிசெஃபின் குழந்தைகள் நலனுக்கான தூதராக கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டு உள்ளார். குழந்தைகளின் வளர்ச்சிக்காக 76 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்த அமைப்பில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இக்குழுவில் ஏற்கெனவே, அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், பிரியங்கா சோப்ரா, ஆயுஷ்மான் குரானா, கரீனா கபூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


