News June 20, 2024

காஞ்சிபுரத்தில் 120 ஆண்டு பழமையான காஞ்சி குடில்

image

காஞ்சிபுரம் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் காஞ்சி குடில் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இது தனது 120 ஆண்டுகால பழமையால் பெருமிதம் கொள்கிறது. காஞ்சி எஸ்.வி.என் பிள்ளை தெருவில் உள்ள இதில் வீட்டு உபகரணங்கள், ஆடைகள், நாணயங்கள், கைவினைப் பொருட்கள் என பிற அன்றாட உபயோகப் பொருட்களை காணலாம். காஞ்சி குடில் ஒரு சுற்றுலா தளமாக மட்டுமல்லாமல், கலாச்சாரத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.

Similar News

News August 30, 2025

காஞ்சியில் சோழர் கால மருத்துவமனை

image

நவீன மருத்துவ மனைகளுக்கு முன்னோடியாக சோழர் காலத்தில் காஞ்சிபுரம் திருமுக்கூடலில் மருத்துவமனை செயல்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இங்குள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆதுலர் சாலை என்று அழைக்கப்படும் மருத்துவமனை செயல்பட்டுள்ளது. சிகிச்சை அளிப்பதற்கு 15 படுக்கைகள், மருத்துவர், மூலிகை மருந்துகளைத் தயார் செய்கின்ற மருந்தாளுநர்கள். பொதுப்பணியாளர் ஆகியோர் இருந்தாக கோயில் கல்வெட்டு கூறுகிறது

News August 30, 2025

காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (29.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 29, 2025

ஸ்ரீபெரும்புதூர் சார்-ஆட்சியருக்கு பதவி உயர்வு

image

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சார்-ஆட்சியர் மிருணாளினி ஐஏஎஸ் பெரம்பலூர் மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த அருண்ராஜ், சர்க்கரைத்துறை இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டதாக அரசு தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!