News June 20, 2024

ராம்நாடு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

image

திருவாடானை தாசில்தாராக பணியாற்றிய கார்த்திகேயன் ஆர்.எஸ். மங்கலம் நில எடுப்பு தாசில்தாராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனி வட்டாட்சியராக பணியாற்றிய ஜி.ஆர். அமர்நாத் திருவாடானை தாசில்தாராகவும் நியமித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் இன்று
(ஜூன் 20) உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News August 30, 2025

பரமக்குடி குருபூஜை விழாவிற்கு விஜய்க்கு அழைப்பு

image

பரமக்குடியில் செப்டம்பர் 11, 2025 அன்று சுதந்திரப் போராட்ட தியாகி இமானுவேல் சேகரனாரின் 68வது ஆண்டு குருபூஜை விழா நடைபெறவுள்ளது. இதில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்க வேண்டுமென, நேற்று (ஆகஸ்ட்-29) அன்று பரமக்குடி தேவேந்திரர் பண்பாட்டு கழக நிர்வாகிகள், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் அழைப்பிதழ் வழங்கினர்.

News August 30, 2025

ராமநாதபுரம்: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 29) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை, ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும் என காவல்துறை X தளத்தில் அறிவித்துள்ளது.

News August 29, 2025

ராமநாதபுரம்: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

ராமநாதபுரம் மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04567 230036) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!