News June 20, 2024
திருத்தணியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு புதிய குற்றவியல் சட்டங்களை ஜூலை 1ஆம் தேதி முதல் அமுலுக்கு கொண்டு வருகிறது. இந்த நிலையில், திருத்தணியில் மூன்று வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்துவதை கண்டித்தும், சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் நீதிமன்ற நுழைவாயில் பகுதியில் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Similar News
News August 31, 2025
திருவள்ளுர்:அதிகாரிகளால் ரூ.12 கோடி வீண்; கலெக்டர் உத்தரவு

திருவள்ளுர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகளுக்கு, 2023 – 24ம் ஆண்டு 86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் பல பணிகள் கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில், 12.97 கோடி ரூபாய் பணிகளை கலெக்டர் பிரதாப் ரத்து செய்து, நிதியை திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளார். அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் ரூ.3,32,46,204 திருப்பி அனுப்ப பட உள்ளது.
News August 30, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News August 30, 2025
மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் நெடுஞ்சாலை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெற்றது. மேலும் நெடுஞ்சாலைத்துறையின் அனைத்து அலகு அலுவலர்கள் (ம) தேசிய நெடுஞ்சாலைக்கு உட்பட்ட (NHAI) அனைத்து அலகு அலுவலர்களுடன் இக்கூட்டம் நடைபெற்றது.