News June 20, 2024
போடியில் காப்பிகொட்டை விலை அதிகரிப்பு

போடி நாயக்கனூர், குரங்கணி, காரிப்பட்டி, சென்ட்ரல் அகமலை பகுதிகளில் காப்பி விவசாயம் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் தற்போது காயவைத்து இருப்பு வைக்கப்பட்டுள்ள தோல் நீக்கப்படாத காப்பி தளிர் கிலோ ரூ.310 வரையிலும் தோல் நீக்கப்பட்ட காப்பி அரிசி கிலோ 1 க்கு ரூபாய் 420 முதல் 450 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. வரும் செப்டம்பர் வரை விலை உயர்வு தொடர வாய்ப்புள்ளது.
Similar News
News February 9, 2026
தேனி: சொந்த வீடு வாங்க ஒரு அரிய வாய்ப்பு!

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு சார்பில் 2600 அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது 1400 வீடுகள் காலியாக உள்ளது. வீடுகள் தேவைப்படுவோர் சொந்த வீடு, நிலம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு தேனி எஸ்.பி அலுவலகம் பின்புறம் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News February 9, 2026
தேனி: வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

ராஜப்பன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் குபேந்திரன். இவா் 2 தினம் முன்பு வீட்டை பூட்டிவிட்டு தேனியில் உள்ள மகள் வீட்டு விஷேசத்துக்கு குடும்பத்துடன் சென்றாா். நேற்று (பிப்.8) வீட்டுக்கு திரும்பச் சென்று பாா்த்த போது வீட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 4.5 பவுன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. திருட்டு குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு.
News February 8, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 8.02.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.


