News June 20, 2024
NEET தேர்வையும் ரத்து செய்ய வேண்டும்

UGC-NET தேர்வைப்போல, 2024 NEET நுழைவுத் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உதவி பேராசிரியர் பணிகளுக்காக ஜூன் 18இல் நடத்தப்பட்ட UGC-NET தேர்வில் முறைகேடு நடந்ததால், அந்த தேர்வை நேற்று மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது. இதேபோல, நடப்பாண்டு NEET தேர்விலும் குளறுபடி நிகழ்ந்துள்ளதால், அதனையும் ரத்து செய்துவிட்டு புதிய தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News September 12, 2025
செப்டம்பர் 12: வரலாற்றில் இன்று

*1832 – தமிழ் பதிப்புத்துறை முன்னோடி தாமோதரம் பிள்ளை பிறந்தநாள். *1959 – சோவியத் ஒன்றியம் ஏவிய லூனா 2 விண்கலம் சந்திரனை அடைந்தது. *1960 – வைகை புயல் வடிவேலு பிறந்தநாள். *1968 – நடிகை அமலா பிறந்தநாள். *1989 – கௌதம் கார்த்திக் பிறந்தநாள். *2010 – பாடகி ஸ்வர்ணலதா மறைந்த நாள். *2015 – மத்திய பிரதேசம், பெட்லாவாத் நகரில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 105 பேர் உயிரிழப்பு.
News September 12, 2025
பிக்பாஸ் சீசன் 9: முதல் எபிசோட் எப்போது?

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 அக்டோபர் 5-ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 3-ம் தேதி விஜய் சேதுபதி புதிதாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் பிக்பாஸ் வீட்டை பார்வையாளர்களுக்கு சுற்றி காட்டுவார் எனக் கூறப்படுகிறது. அதன் பிறகு அக்.5 ஞாயிறு அன்று கூமாபட்டி தங்கபாண்டியன், பால சரவணன், சதீஷ் கிருஷ்ணன், ஷபானா, உமர், உட்பட 20 போட்டியாளர்கள் வீட்டிற்குள் செல்ல இருக்கின்றனராம்.
News September 12, 2025
50 வயதை தொட்ட ஆண்களுக்கு எச்சரிக்கை

ஆண்களை அதிகம் தாக்கும் புற்றுநோய்களில் ஒன்று புராஸ்டேட் கேன்சர். இதன் அறிகுறிகளை முன்பே அறிந்து சிகிச்சை எடுத்தால் பிழைக்கும் வாய்ப்பு 95% வரை இருக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். இதன் முக்கிய அறிகுறிகள்: 1) உடனே, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு, *சிறுநீர் வெளியேற்றம் மெதுவாக இருப்பது *எலும்புகளில் வலி *விறைப்புத்தன்மை குறைதல். தேவையானவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.