News June 20, 2024
உயர்நீதிமன்றத்தில் அதிமுக முறையீடு

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முறையீடு செய்துள்ளது. விஷச்சாராயம் குடித்ததில் இதுவரை 37 பேர் பலியான நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு உடனடி நிவாரணம் அளிக்க அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
Similar News
News November 15, 2025
மதுரை: டிராக்டர் மோதி டூவீலரில் சென்றவர் பலி.!

திருமங்கலத்தைச் சேர்ந்த தவமணி (59), என்பவர் டூவீலரில் மங்கல்ரேவு அத்திப்பட்டி சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். ஜம்பலாபுரம் அருகே பேரையூரைச் சேர்ந்த இளையராஜா (34) என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் இவர் மீது மோதியது. படுகாயத்துடன் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தவமணி இன்று உயிரிழந்தார். டிராக்டர் டிரைவரை கைது செய்து பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 15, 2025
100 நாள் வேலை திட்டத்தில் இனி 4 மணி நேரம் வேலை

₹2,000 உதவித்தொகையை ₹6,000 ஆக உயர்த்த கோரி தமிழகம் முழுவதும் கடந்த 11-ம் தேதி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் அவர்களை அழைத்து பேசினார். இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் சங்கம் கூறும்போது, உதவித்தொகை ₹1,000 உயர்த்தப்படும்; மேலும், 100 நாள் வேலை திட்டத்தில் இனி 4 மணி நேரம் வேலை செய்தால் போதும் என தலைமை செயலாளர் உறுதியளித்ததாக தெரிவித்தனர்.
News November 15, 2025
மணிரத்னம் ஹீரோயினாக ஆசை: கயாடு லோஹர்

‘டிராகன்’ படம் மூலம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட கயாடு லோஹர், நல்ல கதையம்சம் இருந்தால் எந்த ஹீரோவுடனும் நடிக்க தயார் என்று கூறியுள்ளார். அதேநேரம், மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார். மேலும், கவுரி கிஷன் மீதான உருவகேலிக்கு பதிலளித்த அவர், எல்லா துறைகளிலும் விமர்சனங்கள் வரும், அதிலிருந்து தப்பவே முடியாது என்றும் கூறியுள்ளார். இவர் ‘STR 49’ படத்தில் நடித்து வருகிறார்.


