News June 20, 2024
விஷச்சாராயத்தை ஒழிக்க என்ன செய்யலாம்?

பொதுவாக கிராமங்களில் விழிப்புணர்வு இல்லாமல் விஷச்சாராய விற்பனை நடக்கிறது. இந்த பகுதிகளை கண்டுபிடித்து, குழுக்களை அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விஷச்சாராய தொழிலில் ஈடுபடுவோர் குறித்து தகவல் அளிக்க தொடர்பு எண்களை அறிவித்து, கிராமங்களில் அனைவர் கண்களிலும் படும்படி விளம்பரப்படுத்த வேண்டும். பின்னர் அதன்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.
Similar News
News November 15, 2025
BREAKING: இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

டெட் தேர்வு நடைபெறுவதையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சனிக்கிழமை விடுமுறை என்றாலும், சில வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் செயல்படும். ஆனால், தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டெட் தேர்வையொட்டி, புதுச்சேரியிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 15, 2025
பிஹார் போல தமிழக பெண்கள் செயல்படுவர்: வானதி

பிஹாரில் பெண்கள் அதிகளவு பாஜகவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதேபோன்ற வெற்றியை தமிழகத்திலும் உறுதியாக எதிர்பார்க்கிறோம். பெண்கள் தெளிவாக முடிவெடுத்துவிட்டால், அவர்களுக்கான அரசை உருவாக்கி காட்டுவார்கள் என்பதற்கு பிஹார் ஒரு உதாரணம். தமிழகத்தில் உள்ள பெண்களும், பாதுகாப்பான தமிழகம் அமைவதற்காக NDA கூட்டணியை தேர்வு செய்வர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 15, 2025
அனைத்து தோஷத்தையும் நீக்கும் விநாயகர் வழிபாடு!

ஞாயிற்றுக்கிழமை பிரம்ம முகூர்த்தத்தில், விநாயகர் படத்தின் முன், ஒரு தட்டில் முழுவதுமாக அருகம்புல்லை பரப்பி வைக்கவும். அதன் மேல், அகல் விளக்கில், தேங்காய் எண்ணெய் ஊற்றி கிழக்கு திசை பார்த்தவாறு, தீபம் ஏற்றி வைக்க வேண்டும். ‘ஓம் கணேசாய நமஹ’ என்ற மந்திரத்தை 54 முறை உச்சரிக்கவும். விளக்கு குறைந்தது அரை மணி நேரமாவது எரிய வேண்டும். பிறகு, அருகம்புல்லை விநாயகரின் படத்துக்கு போட்டு விடலாம். SHARE IT.


