News June 20, 2024
கள்ளச்சாராயம் VS விஷச்சாராயம்

கள்ளச்சாராயத்திற்கும், விஷச்சாராயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. மதுவை அரசு அனுமதியில்லாமல், உரிமம் இல்லாமல் காய்ச்சி குடிப்பது அல்லது விற்பது கள்ளச்சாராயம். அதுவே, போதைக்காக மெத்தனால் கலக்கப்படும் போது விஷச்சாராயமாகி விடும். எத்தனால் எனப்படும் எத்தில் ஆல்கஹால் தான் மது வகைகளில் இருக்கக் கூடியது. மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய கொடிய விஷமாகும்.
Similar News
News November 15, 2025
ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேற இதுதான் காரணமா?

‘ரஜினி 174’ படத்தில் இருந்து <<18275475>>சுந்தர் சி<<>> வெளியேறியதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிக்கு ஒரு ஜாலியான பேய் கதையை சுந்தர் சி கூறியுள்ளாராம். கதை பிடித்துபோன ரஜினி, திரைக்கதையில் சில மாற்றங்களை செய்ய சொல்லி கூறியிருக்கிறாராம். மாற்றங்களை செய்தாலும், அடிக்கடி கரெக்ஷன் சொன்னதால் கடுப்பான சுந்தர் சி, யாரிடமும் சொல்லாமல், படத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டாராம்.
News November 15, 2025
பிஹார் தேர்தல்: முழு ரிசல்ட் இதோ..

பிஹாரின் 243 தொகுதிகளுக்குமான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பாஜக 89, JD(U) 85 என NDA கூட்டணி மொத்தம் 202 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. RJD 25, காங்கிரஸ் 6 என MGB கூட்டணி 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலை விட 15 தொகுதிகளில் கூடுதலாக வென்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதேபோல், கடந்த தேர்தலை விட RJD 50, காங்கிரஸ் 13 தொகுதிகளை பறிகொடுத்துள்ளது.
News November 15, 2025
அலுவலக ரொமான்ஸ்.. அசர வைக்கும் இந்தியா

YouGov உடன் இணைந்து Ashley Madison, உலகளவில் அலுவலக ரொமான்ஸ் அதிகமுள்ள நாடுகளை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் நாம் நினைப்பதை விட அதிகமாகவே அலுவலக ரொமான்ஸ் இருக்கிறது. எந்த நாட்டில், எவ்வளவு சதவீதம், அலுவலக ரொமான்ஸ் நடைபெறுகிறது என்பதை, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.


