News June 19, 2024
21ஆம் தேதி +1 பதிவெண்கள் பட்டியல் வெளியீடு

+1 பொதுத்தேர்வு எழுதி, மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்குள், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் வரும் 21ஆம் தேதி www.dge.tn.gov.in -இல் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மறுகூட்டல்/ மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும் திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
Similar News
News March 21, 2026
சென்னை: மீனுக்கு வீசிய வலையில் சிக்கிய ஆண் உடல்

பட்டினப்பாக்கம், நொச்சிகுப்பத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (42). மீனவர். சக மீனவர்களுடன் நேற்று, பட்டினம்பாக்கம் கடலில், படகில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கடலில் விழுந்தார். அங்கு, மீன் பிடிப்பதற்காக ஏற்கனவே வீசப்பட்ட வலையில் சிக்கினார். இதனால் நீந்த முடியாமல், மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.

திருத்தணி அருகே அம்மன் நகை திருட்டு!

திருவள்ளூர்: திருத்தணி,ம் திருவாலங்காடு ஒன்றியம் தோமூர் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள், கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, அம்மன் கழுத்தில் இருந்த பவன் தாலி மற்றும் உண்டியலில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து கோயில் மேற்பார்வையாளர் நாகம்மாள் அளித்த புகாரின் பேரில், கனகம்மாசத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.