News June 19, 2024
உங்கள் Gmail-ஐ மர்மநபர் பயன்படுத்துகிறாரா?

மறந்து சில இடங்களில் G-mail சேவையை Log out செய்யாமல் வந்திருந்தால், பிறர் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதைத்தடுக்க G-mail சில வசதி அளிக்கிறது. G-mail பக்கத்தில் மேலே புகைப்படம் இருக்கும் இடத்தை அழுத்தினால், Click Manage your Google Account என்று வரும். அதை அழுத்தினால் வரும் Click Security-க்குள் சென்றால், எத்தனை உபகரணங்களில் உங்கள் G-mail உள்ளது என்பது தெரியும். அதை பயன்படுத்தி Log out செய்யலாம்.
Similar News
News November 15, 2025
வி.சேகர் மறைவு வேதனை அளிக்கிறது: அன்புமணி

திரைப்பட இயக்குநர் வி.சேகர் மறைவு வேதனை அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார். திரைப்படங்கள் பொழுதுபோக்குக்கான கருவிகள் என்பதையும் கடந்து, தமது திரைப்படங்கள் வாயிலாக பொதுவுடமை, சமத்துவம், சமூகநீதி கருத்துகளைப் பரப்பியவர். முகம் சுழிக்காமல் குழந்தைகளுடன் குடும்பமாக சேர்ந்து பார்க்கும் வகையிலான திரைப்படங்களை படைத்தவர் வி.சேகர் என்றும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
News November 15, 2025
டெல்லி சம்பவம்: டாக்டர்களின் அங்கீகாரம் ரத்து

டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 டாக்டர்களின் அங்கீகாரத்தையும் தேசிய மருத்துவ கவுன்சில் ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குண்டு வெடிப்பு வழக்கில் முசாஃபர் அகமது, அதில் அகமது ராதெர், முஷாமில் ஷகீல், ஷாகீன் சயீத் உள்ளிட்ட 4 டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் NIA தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
News November 15, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


