News June 19, 2024

நெல்லை: ஆபத்தான வகையில் பைக் சாகசம்

image

வள்ளியூர் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், பொதுமக்களின் உயிருக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் நெடுஞ்சாலை பகுதிகளில் விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் பைக்குகளில் சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சாதிய உணர்வை தூண்டும் வகையிலும் அதனை சமூக வலைதளங்களில் கெத்தாக பதிவிட்டும் வருகின்றனர். பைக் வீலிங்கில் ஈடுபடும் இளைஞர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News September 14, 2025

நெல்லை முக்கிய ரயில் கோவையில் நிற்காது

image

சேலம் ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக நெல்லையிலிருந்து பிலாஸ்பூருக்கு இயக்கப்படும் விரைவு ரயில்
(எண்: 22620) இன்று மட்டும் கோவையில் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பாடனூர், இருகூர் வழியாக இந்த ரயில் திருப்பி விடப்படுகிறது. கோவைக்கு பதிலாக பாடனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 14, 2025

நெல்லை மக்களே; ரூ.81,000 வரை சம்பளம்!

image

நெல்லை மக்களே; மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு B.sc முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக் செய்து<<>> (செப்.14) இன்றே விண்ணப்பிக்கவும். செம்ம வாய்ப்பு. B.sc முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News September 14, 2025

நெல்லை: மழைக்காலத்தில் ஒரு மெசேஜ் போதும்!

image

திருநெல்வேலி மக்களே உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், திருநெல்வேலி மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!