News June 19, 2024
குமரியில் இன்று சிஐடியு தொழிற்சங்கம் ஆர்பாட்டம்

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் வரும் 24-ந் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தை விளக்கி குமரி போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.பணிமனை தலைவர் முத்துகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Similar News
News November 8, 2025
குமரி: பைக் விபத்தில் வாலிபர் பலி

கன்னியாகுமரி மாவட்டம், ஆற்றூரில் இருந்து முள்ளுவிளை நோக்கி வாலிபர் பைத்தில் சென்றுகொண்டிருந்தார். பைக் ரோட்டில் கிடந்த பள்ளத்தில் சிக்கி நிலைதடுமாறி வாலிபர் கிழே விழுந்தார். தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலே வாலிபர் உயிரிழந்தார். விபத்துக்குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 8, 2025
குமரி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News November 8, 2025
குமரி: லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு

திருவட்டார் அருகே தேமானூர் பகுதியில் அருமனையில் இருந்து ஆற்றூர் நோக்கி நேற்று இரவு ரப்பர் கட்டன்ஸ் ஏற்றி வந்த லாரி ஆற்றூரில் இருந்து தேமானூர் நோக்கி வந்த பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தில் பைக்கில் வந்தவர் பலியானார். பைக்கில் வந்தவர் சிதறாமல் பள்ளிக்கோணம் பகுதியை சேர்ந்த ஸ்டாலின் (36) என தெரியவந்தது. இது குறித்து திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


