News June 19, 2024

கடலூர்: படித்த இளைஞர்களுக்கு இது கட்டாயம்!

image

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வருகின்ற 21ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.இதில் தனியார் நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வுசெய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்குகின்றனர்.அதனால் 10 மற்றும் 12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் அருண் தம்புராஜ் இன்று தெரிவித்தார்.

Similar News

News March 12, 2026

கடலூர்: பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்

image

குறிஞ்சிப்பாடி அடுத்த புலியூர் காட்டு சாகையை சேர்ந்தவர் ராஜ்குமார்(30). இவர் தனது மனைவியின் அக்காள் வீட்டுக்கு சென்றிருந்த போது, அங்குள்ள குளியல் அறையில் தனது செல்போனை வைத்துள்ளார். பின்னர் தனது மனைவியின் அக்காள் குளிப்பதை அதில் வீடியோ பதிவு செய்துள்ளார். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் ராஜ்குமார் மீது நேற்று வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 12, 2026

கடலூர்: ரயில் மோதி முதியவர் பலி

image

விருத்தாசலம் அருகில் சென்னையில் இருந்து நேற்று இரவு ராமேஸ்வரம் நோக்கி சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரயில் சென்றபோது, தண்டவாளத்தை கடக்க முயன்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது மோதியது. இந்த விபத்தில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 12, 2026

கடலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 11) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!