News June 19, 2024
இரண்டு பேர் சதம்.. வலுவான நிலையில் இந்தியா

தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா 136, கேப்டன் ஹர்மன்ப்ரீத் 103* ரன்கள் அடித்து அசத்தினர். ஷஃபாலி வர்மா 20, ஹேமலதா 24, ரிச்சா கோஷ் 25ரன்கள் எடுத்தனர். முன்னதாக முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 13, 2026
1 சிலிண்டர் விலை ₹10,000.. பெரும் பாதிப்பு

கேஸ் தட்டுப்பாட்டால் முதலில் பாதிக்கப்பட்டது பெங்களூருதான். அங்கு கள்ளச் சந்தையில் 1 வணிக சிலிண்டர் ₹10,000 வரை விற்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஹோட்டல்கள், ஹாஸ்டல்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஹாஸ்டல்களில் உணவு தயாரிக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டிருப்பதால், அங்கு தங்கியுள்ள லட்சக்கணக்கானோர் அவதியடைந்துள்ளனர். TN-ல் சிலிண்டர் <<19368954>>₹6,000 வரை<<>> விற்கப்படுகிறது.
News March 13, 2026
வந்தாச்சு ‘டிசைனர் அரிசி’.. நீரிழிவு பிரச்னைக்கு தீர்வா?

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அரிசியை தவிர்க்க வேண்டும் என்பார்கள். ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்காகவே புது ‘டிசைனர் அரிசி’யை உருவாக்கி இருப்பதாக CSIR-NIIST விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இதில் சாதாரண அரிசியை(6-8%) விட புரதச்சத்து(20%) அதிகமாம். மேலும், இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் B12 இருப்பதால் ரத்த சோகை பாதிப்பையும் தவிர்க்கலாம் என தெரிவிக்கின்றனர். SHARE IT.
News March 13, 2026
பரபரப்பு ட்விஸ்ட்: திமுக கூட்டணியில் இணைந்தார்

OPS திமுகவில் இணைந்ததை கடுமையாக விமர்சித்த பெங்களூரு புகழேந்தி, இன்று திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதிமுக பிளவுக்கு பிறகு OPS அணியில் இருந்த அவர், ‘புரட்சி அதிமுக’ என்ற கட்சியை தொடங்கினார். சமீபகாலமாக விஜய்க்கு ஆதரவாக பேசி வந்ததால், தவெக கூட்டணிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.


