News June 19, 2024
4 பேர் உயிரிழந்த விவகாரத்தில் முக்கிய நபர் கைது

தமிழ்நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் கள்ளக்குறிச்சி விவகாரத்தில், சாராய வியாபாரி கோவிந்தராஜை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News November 15, 2025
நோட்டாவுடன் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் கட்சி

முதல் முறையாக தேர்தல் களம் கண்ட தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி(JSP), பிஹாரில் படுதோல்வி அடைந்துள்ளது. 238 தொகுதிகளில் போட்டியிட்ட JSP பெரும்பாலான இடங்களில் டெபாஸிட்டை இழந்துள்ளது. அக்கட்சி மொத்தமாக 3.44% வாக்குகளையே பெற்றுள்ளது. அதோடு 68 தொகுதிகளில் நோட்டாவை விட குறைவான வாக்குகளே JSP-க்கு கிடைத்துள்ளது. அரசியலில் புதிய கட்சிகளுக்கு இடமில்லையா?
News November 15, 2025
ராசி பலன்கள் (15.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 15, 2025
செண்பகப் பூவாய் சிவப்பு சேலையில் ருஹானி

கடைசி பென்ச் கார்த்தி படத்தின் மூலம் அறிமுகமான ருஹானி ஷர்மா, அதன்பின் தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து வந்தார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழில் நடித்துள்ளார். ‘மாஸ்க்’ திரைப்படம், வரும் நவம்பர் 21ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், இவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. உங்களுக்கும் பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.


