News June 19, 2024
நன்றி தெரிவித்த சேலம் நாடாளுமன்ற உறுப்பினர்

நடைபெற்று முடிந்த சேலம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட டி.எம்.செல்வகணபதி வெற்றி பெற்றார். இதையடுத்து, இந்தியா கூட்டணி செயல் வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் சேலம் ஐந்து ரோடு தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்வில், செல்வகணபதி கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார். உடன், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News March 12, 2026
தேர்தலில் பணிபுரிய அழைப்பு

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சேலத்தில் பாதுகாப்புப் பணிக்காக ஓய்வு பெற்ற காவல்துறை மற்றும் ராணுவ வீரர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள தகுதியான நபர்கள் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் தனிப் பிரிவில் மனு அளிக்கலாம் என ஆணையர் அனில்குமார் கிரி தெரிவித்துள்ளார்.
News March 12, 2026
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்ச்.11) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News March 11, 2026
மத்திய அமைச்சரிடம் மனு

டெல்லியில் இன்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரியை, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி (ம) சேலம் எம்பி டி.எம்.செல்வகணபதி ஆகியோர் நேரில் சந்தித்தனர். அப்போது, தமிழ்நாட்டிற்கு தேவையான இயற்கை எரிவாயு வழங்கலை உறுதி செய்யவும், தட்டுப்பாடின்றி சிலிண்டர் வழங்கவும் வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை அமைச்சரிடம் வழங்கி விரிவாகக் கோரிக்கை விடுத்தனர்.


