News June 19, 2024

வேலூரில் திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஜூன் 21ம் தேதி திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கைகளும் தவறாமல் கலந்துகொள்ள வேண் டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 26, 2026

வேலூரில் துடிதுடித்து பலி

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பி.என். பாளையம் ஏரியில் நேற்று நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மேல் செட்டிக்குப்பத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவர் சுரேந்தர் (17) சேற்றில் சிக்கி துடிதுடித்து உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட பொதுமக்கள் பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து குடியாத்தம் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 26, 2026

வேலூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (மார்ச்- 25) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!