News June 19, 2024

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

image

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று, “வாழ்வாதாரம் இழந்துள்ள மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு, வேலை, மாற்று குடியிருப்பு வசதிகள் செய்து தரக்கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின், “மறுவாழ்வு கிடைக்கும் வரை தொழிலாளர்களை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து பதிலளிக்க வேண்டும்” என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

Similar News

News August 29, 2025

மதுரை மாநகராட்சி மின் மயானத்தில் புதிய கட்டணம் நிர்ணயம்

image

மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான மூலக்கரை மற்றும் தத்தனேரி ஆகிய பகுதியில் மின் மற்றும் எரிவாயு மூலம் தகனம் செய்யும்போது நவீன எரிவாயு தகன மேடையினை பயன்படுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையான 3,450 ரூபாய் மட்டும் பொதுமக்களிடம் தகன மேடையில் வைத்து எரியூட்டும் தொகை மற்றும் புதைப்பு கட்டணமாகவும் நிர்ணயித்து மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் என அறிவிப்பு.

News August 29, 2025

64 ஆண்டுகளுக்கு பின் நடந்த கும்பாபிஷேகம்

image

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஜெயலட்சுமி, விஜயலட்சுமி, வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் 64 ஆண்டுகளுக்கு பின்பு நடந்தது. நான்காம் காலயாக பூஜைகள் நடந்தன. பின்பு கடம் புறப்பாடாகி காலை 9:00 மணியளவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. வெங்கடேசன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் கோபாலன், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் ராஜா, சோழவந்தான் பேரூராட்சி சேர்மன் ஜெயராமன் கலந்து கொண்டனர்.

News August 29, 2025

மதுரையிலேயே IT வேலை.. HCL தரும் சூப்பர் வாய்ப்பு..

image

மதுரை HCL ஐடி நிறுவனத்தில் காலியாக உள்ள புராடெக்சன் சப்போர்ட் புரோபஷனல் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக<> கிளிக் செய்து<<>> விண்ணப்பித்து பயன் பெறலாம். இந்த பணிக்கான இண்டர்வியூ மதுரையிலே நடைபெறும். ஊதியம் கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். IT வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!