News June 19, 2024
திருப்பதியில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் தொடங்கியது

திருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டுக்கு ஒருமுறை தங்கக்கவசம் களையப்பட்டு திருமஞ்சம் நடைபெறும். இதன் முதல் நாளில், வைர கவசமும், இரண்டாம் நாளில் முத்து கவசமும் அணிவிக்கப்படும். பின்னர் திருமஞ்சம் நடைபெற்று மீண்டும் தங்கக்கவசம் அணிவிக்கப்படும். இதனை கோயில் நிர்வாகம் ஜேஷ்டாபிஷேகம் என அழைக்கின்றது. இந்நிகழ்வு தற்போது நடைபெற்று வருவதால் திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
Similar News
News March 22, 2026
தமிழகத்தில் ₹75 கோடி ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

TN முழுவதும் நடந்த சோதனையில் இதுவரை ரொக்கம் மட்டும் ₹23.74 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக CEO அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். ₹23.19 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருள்கள், ₹6.16 கோடி மதிப்பிலான மது & போதை பொருள்கள், இலவச பொருள்களோடு ரொக்கத்தையும் சேர்த்தால் ஒட்டுமொத்த மதிப்பு ₹75.3 கோடி ஆகும். உரிய ஆவணங்களை சமர்ப்பித்து ரொக்கம், நகைகளை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
News March 22, 2026
கூட்டணியில் சுயமரியாதையை இழந்ததா விசிக?

அரசியலில் தங்கள் வளர்ச்சியை முன்னிறுத்தி திமுக கூட்டணியில் 10 சீட்டுகள் கேட்டு விசிக நெருக்கடி கொடுக்கிறது. ஆனால், திமுகவோ 5 (அ) 6 சீட்டுகள் மட்டும்தான் என விடாப்பிடியாக உள்ளதாம். இதனால், தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், திருமாவளவன் தனது சுயமரியாதையை இழந்து திமுகவுடன் பயணிப்பதாக அதிமுக, பாஜக விமர்சித்து வருகின்றன. அதற்கு பதிலடியாக விசிக கூடுதல் சீட்டை கேட்டுப் பெறுமா?
News March 21, 2026
கடன் தள்ளுபடி.. வெளியாக போகும் திமுக தேர்தல் அறிக்கை

திமுக தேர்தல் அறிக்கை இன்னும் ஓரிரு நாள்களில் வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதில், *மாணவர்களின் கல்விக்கடன் நிலுவைத் தொகை தள்ளுபடி *சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு ₹10,000 வரை மானியம் *மகளிருக்கு சிறப்பு உரிமைத்தொகை *சிறு, குறு விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் தள்ளுபடி *நிலமற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா & கான்கிரீட் வீடுகள் உள்ளிட்ட பல அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாம்.


