News June 19, 2024
வட கொரியா சென்றார் ரஷ்ய அதிபர் புடின்

ரஷ்ய அதிபர் புடின், 24 ஆண்டுகளுக்குப் பின் வட கொரியா சென்று அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்தார். உக்ரைனுக்கு எதிரான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் அதிகம் தேவைப்படுகிறது. அதற்காக அவர்கள் வட கொரியாவை நாடுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். இருநாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 18, 2026
தூங்கிய மக்கள்.. இடமாற்றம் செய்த அரசு

கஜகஸ்தானின் கலாச்சி கிராம மக்களுக்கு 2013-ல் திடீரென பல நாள்கள் தூங்கும் விசித்திர நோய் பரவியது. மக்கள் எப்போது, எப்படி தூங்குகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், பல நாள்கள் தூங்கிக் கொண்டே இருந்துள்ளனர். இதனால் 2015-ல், மக்களை அக்கிராமத்திலிருந்து அரசு வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்தது. இதற்கான காரணம் குறித்து பல ஆய்வுகள் நடந்தாலும், தெளிவான விளக்கம் தற்போதுவரை கிடைக்கவில்லை.
News March 18, 2026
ஹிந்தியில் கடிதம்.. கோபத்தில் துரை வைகோ

சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து TN லோக்சபா உறுப்பினர்களுக்கு ஹிந்தியில் கடிதம் அனுப்பப்பட்டதற்கு துரை வைகோ MP கண்டனம் தெரிவித்துள்ளார். பல தலைமுறைகளாக ஹிந்தி திணிப்பை தமிழகம் எதிர்த்து வரும் சூழ்நிலையில், இச்செயல் ஹிந்தி திணிப்புக்கு சான்றாக மாறி உள்ளதாக அவர் சாடியுள்ளார். இதன் மூலம், தன்னுடைய மொழி உணர்வு காயப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
News March 18, 2026
ஏஜென்சிக்கு போகாதீங்க.. மத்திய அரசு அறிவுரை

LPG சிலிண்டர்களுக்காக ஏஜென்சிகளுக்கு நேரடியாக சென்று மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சிலிண்டர்கள் வீடுகளுக்கே நேரடியாக விநியோகிக்கப்படும் என்பதால் IVRS, வாட்ஸ் ஆப், மொபைல் ஆப், மிஸ்டு கால் மற்றும் UPI ஆப்கள் மூலம் முன்பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், மக்கள் தேவையற்ற பதற்றங்களை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.


