News June 19, 2024

ஜிம்பாப்வே தொடரில் ரோஹித், கோலி, பும்ராவுக்கு ஓய்வு?

image

டி20 உலக கோப்பைக்கு பிறகு ஜிம்பாப்வே சென்று அந்நாட்டு அணிக்கு எதிராக இந்திய அணி 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் போட்டி ஜூலை 6இல் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட இருப்பதாகவும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், சாம்பியன் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Similar News

News September 11, 2025

ஸ்டாலின் குடும்பத்தில் பெரும் துயரம்.. அமைச்சர்கள் இரங்கல்

image

CM ஸ்டாலின் மருமகன் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி(80) மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, PTR பழனிவேல் தியாகராஜன், சாத்தூர் ராமச்சந்திரன், MRK பன்னீர்செல்வம், MP வில்சன் உள்ளிட்டோர் தங்களது X பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனிடையே, ஓசூர் சென்றுள்ள CM ஸ்டாலின் நாளைய திட்டத்தை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்ப உள்ளார்.

News September 11, 2025

உங்க போனில் உடனே இத பண்ணுங்க!

image

சாலையில் மயங்கி விழுந்தால், ஹாஸ்பிடலில் யாராவது சேர்த்து விடுவார்கள். ஆனால், போன் லாக் ஆகி இருப்பதால் உறவினர், நண்பர்களுக்கு தகவல் கொடுப்பது சிரமமாகிறது. இந்த சிக்கல் ஏற்படாமல் இருக்க Lock Screen-ல் Emergency contact வைத்திருக்க வேண்டும். இதை செய்ய, settings-> Emergency contacts செல்லுங்கள். அதில், Add contact-ஐ கிளிக் செய்து, நண்பர்கள், உறவினர்கள் நம்பரை Save பண்ணுங்க. Share it to friends.

News September 11, 2025

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: தலைவர்கள் மரியாதை

image

சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரனின் 68-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அரசு சார்பில் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில், உதயநிதி ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். திருப்பூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு EPS மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், பரமக்குடியில் நயினார், சீமான் உள்ளிட்டோரும் நேரில் மரியாதை செலுத்தினர்.

error: Content is protected !!