News June 19, 2024

ராகுல் ராஜினாமாவுக்கு ஆனி ராஜா வரவேற்பு

image

வயநாடு தொகுதி MP பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்ததற்கு அவரை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார். வயநாடு தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்று முன்னரே கூறியதாகவும் ரேபரேலியில் போட்டியிடுவதை அவர் வயநாடு மக்களிடம் இருந்து மறைத்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். பாசிச சக்திகளை அழிக்க ராகுல் ரேபரேலியில் இருக்க வேண்டும் என்றும் அவர் பேசினார்.

Similar News

News March 16, 2026

சஸ்பென்ஸை உடைத்த செங்கோட்டையன்

image

தவெகவை கூட்டணியில் சேர்ப்பதற்கு முயற்சிகள் நடக்கின்றன என செங்கோட்டையன் கூறியுள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் கட்சியினரிடையே உரையாடிய அவர், விஜய்யை முதல்வராக ஏற்றுக்கொள்கிறவர்களுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம் என உறுதிப்பட தெரிவித்துள்ளார். விஜய் தான் CM முகம் என்ற நிலைப்பாட்டில் தவெகவினர் உறுதியாக இருப்பதால், தவெக – NDA கூட்டணிப் பேச்சு நடத்திருக்க வாய்ப்பில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News March 16, 2026

சற்றுமுன்: மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்

image

திமுகவில் OPS இணைந்ததை விரும்பாத அவரது ஆதரவாளர்கள் அதிமுகவுக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த OPS-ன் ஆதரவாளர்களான திருவையாறு ஊராட்சி ஒன்றிய குழு Ex வார்டு உறுப்பினர் பால்ராஜ், ராயம்பேட்டை ஊராட்சி மன்ற Ex தலைவர் சுகுமார் உள்ளிட்டோர் EPS-ஐ நேரில் சந்தித்து தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களை வரவேற்ற EPS, தேர்தல் பணிகளில் திறம்பட செயல்படுமாறு அறிவுறுத்தினார்.

News March 15, 2026

வீர மகனின் கடைசி நிமிடங்கள்.. உருக்கமான PHOTOS

image

நாட்டுக்காக உயிர்நீத்த ஒரு மக்கள் நாயகனுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்ட போட்டோக்கள்தான் இவை. மேற்குவங்கத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் <<19385403>>அஜய் ஜெய்ஸ்வாலின்<<>> உடல் ராணுவ மரியாதையுடன் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அந்த வீரனின் கடைசி தருணங்களில் எடுக்கப்பட்ட போட்டோக்களை SM-ல் பகிர்ந்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரை போன்ற வீரனின் துணிச்சலுக்கு என்றுமே மரணமில்லை. SALUTE

error: Content is protected !!