News June 19, 2024

உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வந்ததா?

image

PM கிசான் திட்டத்தின் 17வது தவணை நிதியை பிரதமர் மோடி நேற்று விடுவித்தார். தகுதியுடைய ஒவ்வொரு விவசாயியின் கணக்கிலும் ₹2,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்தப் பணம் வந்ததா? என்பதை அறிய PM Kisan இணையதளத்திற்கு சென்று KNOW YOUR STATUS என்ற ஆப்ஷனை <>கிளிக்<<>> செய்யவும். அதில், உங்கள் பதிவு எண்ணை உள்ளிட்டு, உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்த்துக்கொள்ளலாம்.

Similar News

News November 14, 2025

இயக்குநரும் நடிகருமான வி.சேகர் மரணம்.. அஞ்சலி

image

சினிமா இயக்குநரும் நடிகருமான வி.சேகர்(72) உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று உயிர்பிரிந்தது. போரூர் ஹாஸ்பிடலில் உள்ள அவரது உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். வி.சேகரின் உடல் நாளை(நவ.15) கோடம்பாக்கம் இல்லத்திற்கு கொண்டு வரப்பட உள்ளது. திரைபிரபலங்கள் அஞ்சலி செலுத்திய பிறகு மாலையில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. RIP

News November 14, 2025

சொன்னதும் கிடைச்சது, அதற்கு மேலும் கிடைச்சது!

image

பிஹார் தேர்தல் முடிவு குறித்த அமித்ஷாவின் கணிப்பு, தற்போது பேசுபொருளாகி உள்ளது. NDA கூட்டணி எவ்வளவு தொகுதிகள் வெல்லும் என்று அவரிடம் கேட்ட போதெல்லாம், 160 நிச்சயம், 160+ லட்சியம் என்பது போல 160+ எனப் பதிலளித்தார். ஆனால், தேர்தல் முடிவோ அவரது கணிப்பையும் கடந்து, 203 இடங்களில் தற்போது முன்னிலையில் நிற்கிறது. இதை குறிப்பிட்டு பலரும், அமித்ஷா சரியாக தான் சொன்னார் என SM-ல் பதிவிட்டு வருகின்றனர்.

News November 14, 2025

சிறுவயதிலேயே குழந்தைகள் சந்திக்கும் பிரச்னை; ALERT!

image

பீட்சா, பர்கர், சாக்லேட் போன்ற உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால், குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்னை அதிகரித்துள்ளது. இதனால் நாளடைவில் நீரிழிவு, High BP, இதயநோய் மற்றும் மனநல பிரச்னைகள் வரலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதனை தவிர்க்க, காய்கறி, பழம், மீன் போன்ற ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது, உடற்பயிற்சி மேற்கொள்வது ஆகியவற்றை அவர்கள் பின்பற்ற வேண்டும். குழந்தைகளை காக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!