News June 19, 2024

கர்ப்பிணி ஊழியரை பணிநீக்கம் செய்யலாமா?

image

கர்ப்பிணி பெண் ஊழியர் தொடர்பாக கடந்த 1961ஆம் ஆண்டு பேறுகால பலன் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தில் பெண் ஊழியர் ஒருவர் கர்ப்பமாக உள்ளார் என்ற காரணத்திற்காக அவரை எந்த நிறுவனமும் பணிநீக்கம் செய்யக்கூடாது, அத்துமீறினால் 3 ஆண்டு சிறை எனக் கூறப்பட்டுள்ளது. 10 பேருக்கும் மேல் ஊழியர்களை கொண்ட நிறுவனம், கர்ப்பிணிகளுக்கு பேறுகால விடுப்பு அளிக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 11, 2025

அன்புமணி தனி கட்சி தொடங்க ராமதாஸ் அட்வைஸ்

image

பாமக தனது உழைப்பால் உருவான கட்சி என்பதால் மகன் உள்ளிட்ட யாருக்கும் அதில் உரிமை இல்லை என ராமதாஸ் தடாலடியாக அறிவித்துள்ளார். சொந்த குடும்பத்திலேயே வேவு பார்க்கும் கேவலமான செயலை செய்த அன்புமணி, வேண்டுமானால் தனி கட்சி தொடங்கி கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளார். பாமகவில் அன்புமணியின் குடும்பத்தினர் தனியாக ஒரு கட்சியை நடத்தியதாகவும் அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

News September 11, 2025

இனி ‘இரா’ இன்ஷியல் மட்டுமே: ராமதாஸ்

image

<<17675629>>அன்புமணியை <<>>பாமகவில் இருந்து ராமதாஸ் நீக்கியுள்ளார். இதனையடுத்து அவருடன் தொடர்புகொள்ளும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராமதாஸ் எச்சரித்துள்ளார். மேலும், ‘இரா’ என்ற இன்ஷியலை தவிர, எனது பெயரை அன்புமணி பயன்படுத்தக்கூடாது என கூறியுள்ளார். பாமகவை அழிப்பதற்கு அன்புமணி முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய அவர், தான் இல்லாமல் அவர் வளர்ந்திருக்க முடியாது என பேசினார்.

News September 11, 2025

பட்டத்தை தக்கவைத்த எலான் மஸ்க்; மீண்டும் முதலிடம்

image

Oracle நிறுவன பங்குகளின் விலை உயர்ந்ததால், $393 பில்லியன் சொத்து மதிப்பு கொண்ட அதன் உரிமையாளர் லாரி எல்லிசன் NO.1 பணக்காரராக அறிவிக்கப்பட்டார். இதனால் $385 பில்லியன் சொத்து மதிப்பு கொண்ட எலான் மஸ்க் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆனால், Oracle பங்குகள் விலை நேற்று இரவு சரிவை சந்தித்ததால், லாரி எல்லிசனின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது. எனவே, எலான் மஸ்க் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

error: Content is protected !!