News June 19, 2024
பொன்முடி மீதான வழக்கில் இன்று விசாரணை

செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் உட்பட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது, விசாரணையை இன்று(ஜூன் 19) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Similar News
News July 7, 2025
விழுப்புரம் எம்எல்ஏ – வை சந்தித்த அரசு பள்ளி ஆசிரியர்கள்

2024-2025 ஆம் ஆண்டிற்கான பேராசிரியர் அன்பழகன் விருது, தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று ஜூலை 7 அன்று பள்ளித் தலைமை ஆசிரியர் சசிகலா மற்றும் ஆசிரியர்கள், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் இரா.இலட்சுமணனை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
News July 7, 2025
விழுப்புரத்தில் ரயில் மறியல் போராட்டம்

வரும் ஜூலை 9, 2025 அன்று, நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக விழுப்புரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், மாதர் சங்கம், மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து இந்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. புதன்கிழமை காலை 10 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் தவிச மாநில தலைவர் ரவீந்திரன் தலைமையில் இப்போராட்டம் நடைபெறும்.
News July 7, 2025
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகள் திறப்பு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் கீழ் புத்துப்பட்டு ஊராட்சியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 440 வீடுகளை இன்று முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், மு.அமைச்சருமான செஞ்சி மஸ்தான் குத்துவிளக்கு ஏற்றி பயனாளிகளிடம் புதிய வீட்டினை ஒப்படைத்தார் .உடன் மாவட்ட ஆட்சியர், விழுப்புரம் எம்பி உள்ளிட்டோர் இருந்தனர்.