News June 19, 2024

விருதுநகர் அருகே ஓடும் பேருந்தில் நகை திருட்டு

image

சிவகாசி அருகே பூவநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோசலை (65).இவர் நேற்று சுந்தரராஜபுரத்தில் உள்ள தன் மகன் வீட்டிற்கு சென்று விட்டு பின்னர் பூவநாதபுரதிற்கு அரசு பேருந்தில் வந்துள்ளார்.அப்போது கோசலை அருகில் அமர்ந்திருந்த பெண் கோசலை அணிந்திருந்த 4 பவுன் செயின் அறுந்துள்ளதாக கழட்டி பையில் வைக்க சொல்லியுள்ளார்.அதைக் கேட்டு பையில் வைத்த செயினை வீட்டில் வந்து பார்த்தபோது செயின் மாயமானது தெரியவந்தது.

Similar News

News March 14, 2026

விருதுநகர்: கேஸ் புக் செய்வதில் சிக்கலா.? புதிய எண்கள்

image

தமிழ்நாட்டில் இண்டேன் கேஸ் நிறுவனம் சார்பில் முன்பதிவு செய்ய வேண்டிய புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி WhatsApp மூலம், 7588888824, ​SMS மூலம், 7718955555, Missed Call மூலம், 8454955555, மற்றும் INDIAN OIL APP மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க..

News March 14, 2026

விருதுநகர்: பெண்ணை மிரட்டி ரூ.80 லட்சம் பறிப்பு; போலீஸ் கைது.!

image

விருதுநகர், ஆமாத்தூரைச் சேர்ந்த ஏட்டு சுந்தர்ராஜ் (35) என்பவர், விருதுநகரைச் சேர்ந்த கணவரை இழந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாரத்தை கூறி பெண்ணுடன் தனிமையில் வசித்து வந்துள்ளார். மேலும் அவரது மகளை டாக்டருக்கு படிக்க வைப்பதாக கூறி ரூ.80 லட்சம் வரை பெற்று மோசடி செய்துள்ளார். இது குறித்த புகாரில் சுந்தர்ராஜ் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

News March 14, 2026

சிவகாசி: வாகன சோதனையில் சிக்கிய பட்டாசுகள்

image

வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம் விலக்கில் எஸ்.ஐ., முருகேஸ்வரன் தலைமையில் போலீசார் அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் முழுமை அடையாத 30 ஷாட் கொண்ட 350 பாக்கெட் பேன்சி ரக பட்டாசுகள் இருப்பது தெரிய வந்தது. லோடு ஆட்டோவுடன் பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்து, மார்க்கநாதபுரம் டிரைவர் இம்மானுவேலை (28) கைது செய்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!