News June 19, 2024
திருச்சி:இடையூறாக இருக்கும் கடைகள் அகற்றம்

திருச்சி மாநகராட்சியில், பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் கடைகள் அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில் உறையூர் டாக்கர் ரோட்டில் அனுமதி இன்றி போக்குவரத்து மற்றும் நடைபாதைக்கு இடையூறாக இருந்த கடைகளை அகற்றும் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன.திருச்சி மாநகராட்சி உதவி ஆணையர் முன்னிலையில் சுகாதார மேற்பார்வையாளர்கள்,மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டனர்.
Similar News
News March 13, 2026
திருச்சி: ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு

திருச்சி மக்களே, உங்கள் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<
News March 13, 2026
திருச்சி கிரிக்கெட் வீரருக்கு பிசிசிஐ விருது அறிவிப்பு

தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில், 19 வயது பிரிவில் தமிழக அணிக்காக விளையாடிய திருச்சியை சேர்ந்த ஹேம் சுதேசனுக்கு பிசிசிஐ விருது அறிவித்துள்ளது. இவர் 2024-25 ஆம் ஆண்டிற்கான கூச் பிஹார் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனை படைத்தார். இந்த சாதனையை பாராட்டும் விதமாக இவருக்கு எம்.ஏ.சிதம்பரம் விருது வரும் 15ஆம் தேதி டெல்லியில் நடக்கும் விழாவில் வழங்கப்பட உள்ளது.
News March 13, 2026
திருச்சி: 1000 ஆண்டுகள் பழமையான சிலை கண்டெடுப்பு

திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் பெரம்பலூரைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செல்வபாண்டியன் கள ஆய்வினை மேற்கொண்டார். அப்போது நெய்க்குப்பை கிராமத்தில் உள்ள வேம்படியான் கோவில் பகுதி மற்றும் அருகில் உள்ள புதூர் உத்தமனூரில் அய்யனார் கோவில் பகுதியில் பிற்சோழர் காலத்தை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலைகளை கண்டறிந்துள்ளார். இந்த சிலைகள் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.


